கட்டுநாயக்க விமான நிலையத்தின் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு

0
148

Katunayake-image-1கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பல சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து இது தொடர்பில் அறிந்து கொள்வதாற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைமையதிகாரி தம்மிக விஜேசூரியவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் நியூஸ்பெஸ்டக்கு தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைமையதிகாரி தம்மிக விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலைய சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY