ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஜெர்மனி அமைச்சர் அழைப்பு

0
141

150912081143_wolfg_2918806h28 நாடுகள்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்திருக்கும் நிலையில், தொடர்கின்ற அகதிகள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு ஜெர்மனி நிதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நோக்கங்களையும், ஆழமான ஒன்றிணைப்பையும் இடைநிறுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான மூத்த அரசியல்வாதி உல்ஃப்காங் சாவ்வுபிள் எச்சரித்திருக்கிறார்.

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூலம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்திருப்பதன் விளைவுதான், இந்த அமைப்பின் வரலாற்றிலேயே அதற்கான மிக பெரிய அச்சுறுத்தல் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகத் தெரிவு செய்திருப்பது பற்றி தான் திகைத்து போயிருப்பதாக ,வெல்ட் அம் சோன்டாக், என்ற ஜெர்மானிய செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சாவ்வுபிள் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY