பயிற்சியை முடித்து வெளியேறிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கவும்: இம்ரான் மகருப்

0
143

(ஏ.எம்.ஏ.பரீத்)

imran Mahroof MPபோட்டிப் பரீட்சை மூலம் அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டு குறிகியகால பயிற்சியை முடித்து அண்மையில் வெளியேறிய அதிபர் நியமனம் பெற்ற சகல அதிபர்களுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தொரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூவர்கானுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனேகமான பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் நிலவுவதாக அறிகிறேன்.

எனவே, இவ்வாறான பாடசாலைகளில் புதிதாக நியமனயனம் பெற்றவர்களை அதிபர்களாக நியமித்து, சிறந்த பாடசாலை நிர்வாக கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டம். அத்துடன்,

இது தொடர்பாக எடுக்கப் படுகின்ற நடவடிக்கையினை எனக்கு ஒரு வார காலத்தக்குள் அறியத் தர வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY