ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் சிறுவர் பெருநாள் உல்லாச கூடம் திறந்து வைப்பு

0
162

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC06072றமழான் பெருநாளை சிறுவர்கள் உல்லாசமாகக் களிக்கும் வகையில் ஏறாவூர் வாவிக் கரையோர சிறுவர் பூங்காவில் நிருமாணிக்கப்பட்டுள்ள சிறுவர் பெருநாள் உல்லாச கூடத்தை நேற்று முன்தினம் (01) வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திறந்து வைத்தார்.

ஏற்கெனவே அங்குள்ள சிறுவர் பூங்காவுக்கு மேலதிகமாக சிறுவர்கள் பெருநாளை உல்லாசமாகக் கொண்டாடும் வகையில் இந்த விளையாட்டுக் கூடம் அமைக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

DSC06078இந்த சிறுவர் உல்லாச கூடத்தை அமைப்பதற்காக உலக வங்கி மாகாண சபையூடாக 30 இலட்ச ரூபாவை ஒதுக்கியிருந்தது.

பெருநாள் வாரத்தில் இந்தக் களியாட்ட கூடத்தில் இடம்பெறும் நிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுவர் ஒருவரிடமிருந்து 50 ரூபா அறவிடப்படும் என நகர சபைச் செயலாளர் கூறினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர், மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY