சவளக்கடை 5ஆம் கொளனி சுகாதார நிலையத்திற்கு சுகாதர துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் விஜயம்

0
223

(எம்.எம்.ஜபீர்)

DSC07915நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை 5ஆம் கொளனி கற்பினித்தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதார நிலையத்திற்கு சுகாதர துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் இன்று (3) விஜயம் மேற்கொண்டு குறைபாடுகளை கேட்டரிந்து கொண்டார்.

இதன்போது கட்டிடத்தின் கூரை புனர் நிர்மானம், மலசல கூடம், தள பாடங்கள் போன்ற பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான எம்.ஜ.தாஜப்தீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நஸார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச மத்திய குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதவேளை 4ஆம் கொளனி அல்-மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்மா பள்ளிவாசலிக்கு பிரதி அமைச்சர் பைசால் காசீம் விஜயம் மேற்கொண்டு பள்ளிவாசலின் அபிவிருத்தி மற்றும் பிரதேச மக்களின் சுகாதார தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

DSC07909 DSC07913 DSC07914

LEAVE A REPLY