காத்தான்குடி பெருநாள் ஒன்று கூடல் பசாருக்கு பெண்கள் செல்வது கண்டிப்பாக தடை

0
130

(விஷேட நிருபர்)

Perunaal-Bazar-8காத்தான்குடி பெருநாள் ஒன்று கூடல் பசாருக்கு பெண்கள் செல்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது என புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆப்பள்ளிவாயல்(3.6.2016) அறிவித்துள்ளது.

எதிர் வரும் நோன்புப் பெருநாளையொட்டி புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்று கூடல் பசார் நடைபெறவுள்ளது.

இந்த பெருநாள் ஒன்று கூடல் பசார் எதிர் வரும் 6ம் திகதி புதன்கிழமை பிற்பகள் 2மணிக்கு ஆரம்பமாகி 8ம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்த பெருநாள் ஒன்று கூடல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கு பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஏ.எம்.இர்பான் தெரிவித்தார்.

LEAVE A REPLY