ஒலிம்பிக் தகுதி சுற்று: காயம் காரணமாக உசேன் போல்ட் விலகல்

0
209

201607030028445765_Olympic-qualifier--Due-to-InjuryHussain-Bolt-distortion_SECVPFஜமைக்காவை சேர்ந்த தடகள வீரர்–வீராங்கனைகளுக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் யோஹன் பிளாக் 9.95 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். அரை இறுதிப்போட்டியில் 10.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த உசேன்போல்ட் வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.

காயத்தால் விலகி இருக்கும் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன்போல்ட் ஆகஸ்டு மாதம் ரியோடிஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. காயம் குறித்து உசேன்போல்ட் கருத்து தெரிவிக்கையில், ‘ஜூலை 22–ந் தேதி நடைபெறும் லண்டன் ஆண்டுவிழா விளையாட்டு போட்டியில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்குள் உடல் தகுதியை எட்டி விடுவேன்’ என்றார்.

LEAVE A REPLY