சர்வதே பிறை, உள்நாட்டு பிறை அல்லது கணக்கீட்டு முறை இவை மூன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே: கலாநிதி யு.எல்.அகமட் அஷ்ரப்

0
415

(விஷேட நிருபர்)

Dr. Ashraff PHDநேற்று (02) சனிக்கிழமை மாலை காத்தான்குடி கடாபி ஹோட்டலில் நடைபெற்ற காத்தான்குடி மீடியா போரத்துடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெருநாள் என்பது ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கூட்டாக செய்யப்பட வேண்டிய வணக்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பிறை கண்டவர்கள் எல்லாம் நோன்பு நோற்பதில்லை. பிறை கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் போய் சொல்வார்கள்.

சாட்சி சொல்பவர் தகுதியானவராக இருந்தால் அந்த சாட்சியினை ஏற்று பிறகு நபியவர்கள் மக்களுக்கு பிரகடணப்படுத்தவார்கள்.

நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் வானத்தில் பிறை தெரிந்தால் மாதம் ஆரம்பித்து விட்டது, றமழான் நோன்பு நோற்க வேண்டும் அல்லது பெரநாள் கொண்டாட வேண்டும் என்று, ஆனால் அப்படியல்ல.

DSC_0273சில நேரங்களில் பிறையை ஒருவர் கண்டிருப்பார் அவர் நம்பிக்கைக்குரியவராக இல்லாமலிருப்பார். அல்லது வானவியலாளர்களின் ஏகோபித்த முடிவின் படி பிறையை அன்று காணமுடியாது என்ற நிலைப்பாடு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஜம் இய்யத்துல் உலமா இந்த சாட்சியை நிராகரிக்கலாம்.

அதற்காக அங்கு பிறை கண்டார்கள், இங்கு பிறை கண்டார்கள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை மறைத்து விட்டது என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படும். இது வெல்லாம் இஸ்லாமிய சட்டத்தில் இல்லை.

ஜம் இய்யத்துல் உலமா பிழைவிட்டால் கூட எங்களின் நோன்போ அல்லது பெருநாளோ கெட்டு விடாது. இந்த விடயத்தில் உலமாக்கள் மத்தியில் ஏகோபித்த முடிவு இருக்கின்றது.

ஸுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவதா இல்;லையா என்பதில் இரண்டு கருத்து இருக்கின்றது.

ஆனால் நோன்பு பெருநாள் விடயத்தில் அப்படியல்ல ஒரு நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் சர்வதே பிறை அல்லது உள்நாட்டு பிறை அல்லது கணக்கீட்டு முறை ஏதாவது ஒன்றை எடுக்கும் போது அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

Rizwan Madani 1ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கூட்டாக செய்யப்பட வேண்டும். பெருநாள் என்பது வருடத்தில் இரண்டு தடவைகள் கொண்டாப்படுகின்றது. நான் ஒரு நாள் பெருநாள், எனது மகன் இன்னொரு நான் பெருநாள், எனது மகள் இன்னொருநாள் பெருநாள். இது இஸ்லாத்தில் இல்லாததாகும்.

உதாரணமாக சஊதி அரேபியாவில் நாம் போய் இவ்வாறு இரண்டு நாட்கள் பெருநாள் கொண்டாட முடியுமா?

சஊதி அரேபியாவையும் விட இலங்கையில் முந்தி பிறை கண்டு விட்டோம் என்பதற்காக ஒரு நாள் முந்தி சஊதி அரேபியாவில் அறபாவில் தரிக்க முடியுமா? அல்லது ஹஜ்ஜை செய்ய முடியுமா? பெருநாளை ஆளுக்கொரு நாள் கொண்டாட முடியுமா? என நான் கேட்கின்றேன்.

ஆகவே எந்த இடத்தில் அந்த வணக்கம் நடைபெறுகின்றதோ அங்கு அதிகாரமுள்ளவர்களாக யார் இருக்கின்றார்களோ அவர்களின் கட்டுப்கோப்புக்குள்தான் நாங்கள் செயற்பட வேண்டும். அந்த வகையில் இலங்கையில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் முடிவை நாம் எற்றுக் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி எம்.சி.எம்.றஸ்வான் மதனீ உட்டப உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0276 Reporter Noordeen 1

LEAVE A REPLY