யூரோ கால்பந்து: இத்தாலியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி

0
101

201607030620590401_Germany-win-shootout-65-to-end-Italy-jinx-reach-Euro-semis_SECVPFயூரோ கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

ஐரோப்பிய கால்பந்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற 3-வது கால்இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் சாம்பியன் இத்தாலியும் மோதின.

பலம் வாய்ந்த இரு அணியினரும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டன. ஆனால் இறுதி வரையி்ல் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இருப்பினும், தொடர்ந்து அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் 1-1 என்ற கணக்கில் போட்டி சமனில் இருந்தது.

பின்னர் அளிக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் ஜெர்மனி அணி 6-5 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஜெர்மனியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும்.

முன்னதாக, முதல் அரையிறுதி போட்டியில் போர்ச்சுகல் மற்றும் வேல்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY