சீனாவில் பலத்த மழை: நிலச்சரிவில் 28 பேர் உயிருடன் புதைந்து பலி

0
104

201607031117076317_China-Rains-landslides-cause-havoc-28-killed-three-missing_SECVPFசீனாவில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிருடன் புதைந்து பலியாகினர்.

சீனாவில் தென் மேற்கு பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குய்ஷு மலை பகுதியில் பியான்போ கிராமத்தில் பொது மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். காலை 5.30 மணியளவில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்குள்ள வீடுகள் மண்ணில் புதைந்தன.

அங்கிருந்த வீடுகளின் மீது பாறைகள், மண் மற்றும் சேறு விழுந்து அழுத்தியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.

மூடிக்கிடந்த மண்ணை அகற்றி அதில் சிக்கிய அவர்களை மீட்டனர். இருந்தும் 28 பேர் பலியாகினர். 3 பேரை காணவில்லை. அவர்களும் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

ஜியாங்ஸியா மாவட்டத்தில் மழைக்கு ஒரு கம்பெனியின் 15 மீட்டர் நீள சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அதன் ஓரத்தில் நடந்து சென்ற 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

LEAVE A REPLY