தேவாங்கு போல இருக்கிறாய் என்றதால் கொலைவெறி ஏற்பட்டது: ராம்குமார்

0
208

201607031330571755_Swathi-insulted-my-personality-says-ramkumar_SECVPFதமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலையில் பேஸ்புக் பழக்கமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள ராம்குமாரிடம் நேற்று 2–ம் கட்டமாக நுங்கம்பாக்கம் போலீஸ் துணை கமி‌ஷனர் தேவராஜ் விசாரணை நடத்தினார். அப்போது சுவாதியை கொன்றது ஏன்? என ராம்குமாரிடம் போலீசார் கேட்டனர். முதலில் கண்களை மூடி அமைதியாக இருந்த ராம்குமார் பின்னர் மெல்ல பேச ஆரம்பித்தார். விடிய விடிய அவர் அருகில் இருந்த போலீசார், அவர் கண்விழிக்கும் போதெல்லாம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் ராம்குமார் கூறியதாவது:–

‘நான் எப்போதும் பேஸ்புக் பார்த்துக் கொண்டு இருப்பேன். அதில் தான் சுவாதி எனக்கு பழக்கமானார். பின்னர் வாட்ஸ்-அப் மூலமும் தொடர்பு கொண்டேன்.

அடிக்கடி வாட்ஸ்-அப்பில் செய்திகள் அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார். இதைத் தொடர்ந்து அவரை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சென்னை சென்றேன்.

சென்னையில் சுவாதி வீடு அருகே உள்ள சூளைமேடு பகுதியில் மேன்சனில் தங்கினேன். சுவாதி வேலைக்கு செல்வதை நோட்டுமிட்டு அவரை பின் தொடர்ந்து சென்று என்னை அறிமுகம் செய்தேன். பேஸ்புக் நண்பர் என்பதால் சுவாதியும் என்னிடம் நட்பாக பேசினார்.

சில நாட்கள் கழித்து எனது காதலை அவரிடம் சொன்னபோது அவர் அமைதியாக சென்று விட்டார். அவருக்கு பல நண்பர்கள் உண்டு. அவர்களிடமும் சுவாதி அடிக்கடி பேசுவார்.

அது எனக்கு பிடிக்கவில்லை. என்னிடம் மட்டுமே பேச வேண்டும் என சுவாதியிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை கண்டித்தார். தொடர்ந்து நான் அவரை தொந்தரவு செய்ததால் தனியாக செல்லாமல் தன் தந்தையை துணைக்கு அழைத்துக் கொண்டு ரெயில் நிலையத்திற்கு சென்று வந்தார்.

நான் 2 முறை ரெயில் நிலையத்தில் காத்திருந்து அவரிடம் பேசினேன். அப்போது ஒரு முறை நான் தேவாங்கு போல் இருப்பதாக கூறி, என்னிடம் இனி பேசாதே என கூறினார். அப்போதே அவரது வாயை கிழிக்க வேண்டும் என ஆத்திரம் வந்தது. ஆனால் சுவாதி மேல் உள்ள காதலால் திரும்பி வந்தேன்.

மீண்டும் 24-ந் தேதி ரெயில் நிலையதில் சுவாதியிடம் காதலிக்கும்படி கெஞ்சினேன் ஆனால் அப்போதும் அவர் மறுக்கவே ஆத்திரத்தில் அவரது வாயில் அரிவாளால் வெட்டினேன்’.

இவ்வாறு போலீசாரிடம் ராம்குமார் கூறி உள்ளார்.

சுவாதி-ராம்குமார் இடையே ஏற்பட்ட பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் பழக்கம்தான் கொலை வரை அழைத்து சென்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY