பாகிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் பள்ளிவாயல் அடித்துச் செல்லப்பட்டது – 33 பேர் பலி

0
137

201607031250569951_33-killed-17-missing-in-flash-flood-in-Pakistan_SECVPFபாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பெய்துவரும் கனமழையின் விளைவாக நேற்றிரவு ‘தராவீஹ்’ தொழுகையின்போது ஒரு பள்ளிவாயல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மழைசார்ந்த விபத்துகளில் 33 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சிட்ரால் மாவட்டத்துக்குட்பட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள சுமார் 30 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இங்குள்ள உர்சூன் கிராமத்தில் ஒரு மசூதியில் நேற்றிரவு ‘தராவீஹ்’ தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பெருக்கெடுத்து ஓடிவந்த வெள்ளத்தில் அந்த பள்ளிவாயல்  அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் மழைசார்ந்த விபத்துகளில் சிக்கி 33 பேர் பலியாகியுள்ளதாகவும், 17 பேர் காணாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குமாறு தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், கைபர் பக்துங்வா மாகாண கவர்னர் இக்பால் ஜாபர் ஜக்ரா ஆகியோர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY