ஏறாவூரில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 7 மாத சிசுவின் சடலம் மீட்பு

0
171

dd2ca788-1dbe-4718-bf08-2e8ccc1c3370(விசேட நிருபர்)

ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 7 மாத முதிர்ச்சியுடையதாக கருதப்படும் சிசுவின் சடலம் நேற்று சனிக்கிழமை (02) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிசுவை பிரசவித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

சிசுவின் சடலம் வாழை மரங்களிடையே காணப்பட்டது. ஏறாவூர் மீராகேணி பிரதேசத்திலுள்ள அனாதை இல்லத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவரென குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாகவது – கடந்த ஒரு மாத காலமாக இப்பெண் குறித்த அனாதை இல்லத்தில் குடும்பசகிதம் தங்கியிருந்து சமையல் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார். வயிறு வழமைக்கு மாறாக பெரிதாகக் காணப்பட்டபோது கணவர் விசாரித்துள்ளார். வயிற்றில் கட்டியொன்று காணப்படுவதாக வைத்தியசாலைப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதாக கூறிவந்துள்ளார்.

சம்பவ தினம் இப்பெணுக்கு அதிக இரத்தப் பெருக்கு காணப்பட்டதையடுத்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிசுவைப் பிரசவித்துள்ளமை உறுதிப்பட்டுள்ளது. இதையடுத்து சிசுவைத் தேடியபோது அனாதை இல்லத்தில் வாழைமரங்களுக்கிடையே சிசு காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூரப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ca46b01a-0186-45e4-8c61-4bda89728aa9

LEAVE A REPLY