(Poem) ‘நாசா’ மாணவனும் நாசமானவனும்

0
33

(நிஷவ்ஸ்)

சாந்த மாமாக்கு
செய்தி அனுப்ப
சாதனம் கேட்கிறான் அவன்.

சொந்த மாமாக்கு
செய்தி அனுப்பி
சீதனம் கேட்கிறான் இவன்.

ஹை டெக்கில்
கண் காணித்து
அட்டக் பண்ணுகிறான் அவன்.

இவனின்
கண்- காணியிலே
ஹார்ட் அடக் மாமாக்காய்
காத்திருக்கிறான்.

விந்தைகள் செய்வதில்
விடாமல் முயற்சிக்கிறான்
அவன்

தந்தை ஆவதை
தவறாமல் தொடர்கிறான்
இவன்

அறிவால் இவனை
ஆட்டி வைக்கிறான்
அவன்.
அமெரிக்க சதி என்று
நோட்டிஸ் அடித்து
ஆறுதல் அடைகிறான்
இவன்.

அவன்
இருளில் இருந்து
எழும்ப முயல்கிறான்.
இவன்
வெளிச்சத்தில்
வெட்டியாய்த் தூங்குகிறான்

LEAVE A REPLY