(Video) கே.பி.எஸ்.ஹமீட்டின் தலைமையில் மீராவோடையில் இடம்பெற்ற இஃப்தார் நிகழ்வு: கி.மா. முதலமைச்சர் பிரதம அதீதி

0
136

(அஹமட் இர்ஷாட்)

coverஅண்மையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டின் தலைமையில் இடம் பெற்ற இஃப்தார் நிகழ்வு நேற்று (02) சனிக்கிழமை கல்குடா மீராவோடை அல்ஹிதாய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட் வழமைக்கு மாறாக முற்று முழுதாக அரசியலினை தவிர்து தான் ஓர் புனித குர்ஆனை மணனம் செய்த ஹாபிஸ் என்ற ரீதியில் குர்ஆன் வசனங்களுடனான மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்தினார்.

மீராவோடை பிரதேசத்தில் உள்ள அனேகமான முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கலந்து கொண்ட குறித்த இஃப்தார் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், குறை கூறுவதனைபற்றியும், புறம் பேசுதல் பற்றியும் புனித குர் ஆனில் சொல்லப்பட்ட விடயங்களை ஆதாரமாக வைத்து தனது உரையினை நிகழ்த்தினார்.

மேலும் தற்பொழுதைய நவீன காலத்தில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் விருப்பங்களுக்கு அடிபட்டு பிள்ளைகளின் வேண்டுகோளுக்கினங்க நவீன கையடக்க தொலை பேசிகளை பெற்றுக்கொடுப்பதனால் பிள்ளைகள் வலைப்பின்னல்களினூடாக தேவையற்ற விடயங்களை பார்த்து சீரழிந்து செல்லக்கூடிய சமூகமாக மாற்றம் அடைந்து வருக்கின்றனர். இதனை பெற்றோர்கள் முக்கியமாக கவனத்தில் எடுத்து நடக்க வேண்டும் என கூறினார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளக்களிலும் முக நூல்களிலும் புறம் பேசுதல் என்ற தீமையான விடயத்தின் கீழ் பிரரினை தூற்றி வசைபாடுவதினால் இஸ்லாம் முற்றிலும் தடை செய்த புறம் பேசுதல் எனும் தீமைமையான விடயத்தினை வெளிப்படையாகவே வாழ்க்கையில் எடுத்து நடக்கின்ற நிலைமைக்கு எமது சமூகம் தள்ளப்பட்டுள்ளது என்பதனை குர்-ஆன், ஹதீஸ்களின் ஆதரங்களுடன் முதலமைச்சர் விளக்கினார்.

இவ்வாறான தீமையான விடயங்களை வெளிப்படையாக செய்வதற்கு எமது சமூகம் தேர்ச்சி பெற்றுள்ளதினால்தான் எமது கட்சியின் தலைமையினை முகநூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நன்மை தீமைகளை பற்றி சிந்திக்காத சமூகமாக புறம் பேசுதல் எனும் தலைப்பின் கீழ் விமர்சித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

wewewewe

முதலைச்சரை தொடர்ந்து உரையாற்றிய உயர் பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி சிறீலங்கா முச்லிம் காங்கிரசின் அமைப்பாளருமன கணக்கறிஞர் றியால் கடந்த வருட நோன்பில்தான் நான் பாராளுமன்ற தேர்தலுக்காக இப்பிரதேசத்தில் இருந்து அரசியலுக்குள் காலடி வைத்தேன்.

அத்தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டு எனக்கு எதிராக களமிரங்கிய பிரதி அமைச்சர் அமீர் அலி வெற்றி பெற்றிருந்தாலும் தற்பொழுது இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் ஏன் தாங்கள் முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்களிக்க வில்லை என்பதனை சிந்தித்து மனவேதனை அடைந்தவர்களாக காணப்படுவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் கல்குடா பிரதேசத்தில் இருந்து நாளுக்கு நாள் மாற்று கட்சி ஆதரவாளர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்வதனை பார்க்கின்ற பொழுது இன்னும் சில மாதங்களில் கல்குடா தொகுதியானது முன்பிருந்தனை போன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கல்குடா மாறிவிடும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும் கிழக்கு மாகாணத்திலே கல்குடா தொகுதியில் மட்டுமே முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகின்றமையினை நான் இங்கு பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புவதாக கணக்கறிஞர் றியால் தனது உரையில் முக்கிய விடயமாக சுட்டிக்காட்டினார்.

dfdf dffddf

LEAVE A REPLY