உலக நிதி நெருக்கடிக்கு பிறகு கிரேக்கத்தை விட்டு வெளியேறிய அரை மில்லியன் மக்கள்

0
93

image2008 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கிரேக்க வங்கி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கிய , வெளியேறியோர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 100 ஆயிரத்திற்கு (ஒரு லட்சம்) மேலானோராக அதிகரித்து, தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டது.

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்பட வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பலரும் வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிரேக்கத்தின் வேலையில்லா திண்டாட்டம் ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் இந்த சதவீதம் இன்னும் அதிமாகும்.

LEAVE A REPLY