பங்களாதேஸ் கஃபே தாக்குதல்: 9 இத்தாலியர், 7 ஜப்பானியர் பலி

  0
  100

  bangladesh_dhakaAttackவங்கதேசத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு கஃபேயில் இஸ்லாமியவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 20 பேரில், 9 பேர் இத்தாலியரும், 7 ஜப்பானியரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  டாக்காவில் உள்ள ஹோலே ஆர்டிசன் பேக்கரி கஃபேயில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை அதிரடிப்படையினர் மீட்பு நடவடிக்கையை தொடங்கி ஆறு துப்பாக்கித்தாரிகளை கொல்லும் வரை, சுமார் 12 மணிநேரம் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர்.

  குரானிலிருந்து ஒரு வசனத்தை சொல்லியோர் விடப்பட்டதாகவும், பிறர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

  இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

  மீட்பு நடவடிக்கையில் ஆறு துப்பாக்கித்தாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

  வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்க வேண்டுமென அறிவித்துள்ளார்.

  #BBC

  LEAVE A REPLY