வங்காளதேசத்தில் 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்: பிரதமர் ஷேக் ஹசீனா அறிவிப்பு

0
121

imageவங்காளதேசத்தின் டாக்கா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மாலை தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், பிணைக்கைதிகளில் 20 பேரை படுகொலை செய்தனர். சுமார் 10 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஒருவன் மட்டும் பிடிபட்டுள்ளான்.

நாட்டையை உலுக்கியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் ஷேக் ஹசீனா இன்று அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் மிகவும் வெறுக்கத்தக்க செயல் என்று கடுமையாக கண்டித்துள்ள ஹசீனா, தீவிரவாதத்திற்கு பொதுமக்கள் உதவக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY