காத்தான்குடிப் பிரதேச மாணவர்களிடம் கூடுதல் பணம் அறவிடும் இ.போ.ச. அதிகாரி

0
166

(விசேட நிருபர்)

c5374fc6-4f1a-4590-9eb2-99681bb4c15fகாத்தான்குடி இ.போ.ச. டிப்போவினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச் சீட்டுக்களுக்கு (சீஸன் ரிக்கட்), அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விடவும் மேலதிகமாகப் பணம் அறவிடப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி கற்பதற்காகச் செல்லும் மாணவர்களுக்கு இ.போ.சபையினால் வழங்கப்படும் இப்பருவச் சீட்டுக்களுக்கு 38ஒ2 ஸ்ரீ 76.00 ரூபாய் தொகை குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், காத்தான்குடி இ.போ.ச. டிப்போவினால் இக்கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி மாணவர்களிடமிருந்து 100.00 ரூபாவை அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட இப்பருவச் சீட்டுக்களுக்கும் குறித்த அதிகாரி 100.00 ரூபா தொகையையே தம்மிடம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்த மாணவர்கள், இன்று காலையில் ஜூலை மாதத்திற்கான பருவச் சீட்டைப் பெறச் சென்ற வேளையிலும் குறித்த அதிகாரி 100.00 ரூபாவையே தங்களிடம் அறவிட்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் இம்மாணவர்களின் தந்தை ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தனது இரண்டு பிள்ளைகள் மட்டக்களப்பிலுள்ள கல்லூரிகளில் கல்வி கற்று வருவதாகவும், இரண்டு பிள்ளைகளுக்கும் தான் இப்பருவச் சீட்டை குறித்த கட்டணத்திற்கும் மேலதிகமாகப் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்வதால் ஒவ்வொரு மாதமும் 48.00 ரூபாவை மேலதிகமாக இழந்து வருவதாகவும், இதன்படி வருடமொன்றுக்கு 576.00 ரூபாவை குறித்த அதிகாரிக்கு மேலதிகமாகத் தான் வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்க்கும்போது காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பிற்கு கல்வி கற்கச் செல்லும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களிடமிருந்து வருடாந்தம் குறித்த அதிகாரி பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை மேலதிகமாகப் பெற்று வருவதும், இது குறித்து காத்தான்குடி இ.போ.ச. அதிகாரிகளிடம் தாம் நேரில் சென்று முறையிட்ட போதிலும் அவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும் அத்தந்தை எமது செய்தியாளரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி இ.போ.ச. சாலையில் கடமையாற்றும் அதிகாரிகள் மேலதிகப் பணம் அறவிடும் இவ்விடயத்தில் தான் முறைப்பாடு செய்தும் அசிரத்தையாக இருந்து வருவது குறித்து, மிகவும் கஷ்டப்பட்டு இ.போ.ச.வின் கிழக்குப் பிராந்திய முகாமையாளரான சித்தீக் என்பவரின் தொலைபேசி இலக்கத்தை தேடிப் பெற்று அவரிடம் தொலைபேசி மூலம் முறையிட்டபோது, அவர் தனது தொலைபேசி இலக்கத்தை வழங்கியவர் யார் ?; எனக் கேட்டாரே தவிர, நான் தெரிவித்த முறைப்பாட்டினைக் கருத்திற் கொள்ளவில்லை என்றும் குறித்த தந்தை விசனம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் மூலம் நாட்டில் நல்லாட்சி என்ற பெயரில் பெயரளவிலான ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆட்சியாளர்கள் மாறி இருக்கின்றனரே தவிர, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு கடமையாற்றுகின்ற அரசாங்க அதிகாரிகளிடத்தில் எந்தவொரு நல்லாட்சிப் பண்புகளும், மாற்றங்களும் இதுவரையிலும் இந்த நல்லாட்சியாளர்களால் விதைக்கப்படக்கூட இல்லை என்பது தெளிவாகின்றது. தொடர்ந்து பாதிக்கப்படும் காத்தான்குடிப் பிரதேச மாணவர்களுக்கு தீர்வும், நீதியும் பெற்றுக் கொடுப்பது யார்?

LEAVE A REPLY