இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

0
117

201607021628120102_Arunachal-landslide-toll-mounts-to-10_SECVPFஇந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்கு காமெங் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், குடோன்கள் பாதிக்கப்பட்டன.

தொடர் மழை காரணமாக மேற்கு காமெங் மாவாட்டத்தின் பாலுக்போங் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலையில் 9 மாத குழந்தை உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் பலி எண்ணக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மழை நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக மாநில அரசு ரூ.30 லட்சம் விடுவித்திருப்பதாகவும் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கலிக்கோ புல் உத்தரவிட்டார். மேலும், மறுவாழ்வு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய நிலச்சரிவு இதுவாகும். இதற்கு முன் ஏப்ரல் 22-ம்தேதி தவாங் மாவட்டம் பாம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்த 15 தொழிலாளர்கள் மறறும் ஒரு சூப்பர்வைசர் ஆகியோர் பலியாகினர்.

LEAVE A REPLY