(Poem) மொடர்ன் மார்க்கம்

0
23

நிஷவ்ஸ்-

ஸ்பொன்சர் கம்பனிகளின்
இஸ்லாமிய நிகழ்ச்சிகளால்
பயான் வந்தது
பயன் வந்ததா?

மார்க்கக் கடமைக்காய்
மக்கா செல்வதிலும்
மார்கட்டிங் மாயைகளில்
மயங்கி செல்கிறார்கள்
உம்றா ஏஜண்ட்களின்
ஓயாத விளம்பரங்களால்.

கேட்க ஆளில்லாட்டி
ஷேக்கின் ஸதகாவில்
கேக் வெட்டி
கேளிக்கைக் கொண்டாட்டம்.

விரலசைத்தல் தொடர்பில்
விவாதம் செய்து செய்தே
பரலைஸாப் போனது
பாதி சமூகம்.

இருபதா எட்டா
இண்டநெட் சண்டையில்
இருவருக்கும் பாழானது
இஷாவின் ஜமா அத்.

வலது கையால்
வழங்கிய ஸதகாவை
இடது கை அறியவில்லை
இஹ்லாஸா
இல்லை
இடது கையை மறைத்து
இயங்குகிறது ஷெல்பி.

சூரிய ஒளியில்
சுபஹு தொழுதுவிட்டு
குனூத்துக்கெதிராய்
கொமண்ட்ஸ் எழுதுகிறார்
கூடப் படித்தவர்.

LEAVE A REPLY