(Video) டாக்கா உணவு விடுதியில் இலங்கையர்கள் உட்பட 13 பேர் மீட்பு; 28 பேர் பலி

0
26

17731dhakaபங்களாதேஷின் டாக்கா நகரிலுள்ள உணவு விடுதியில் ஐ.எஸ். ஆயுதபாணிகளால் நேற்றிரவு பணயக் கைகதிளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உட்பட இருபது 20 பேரில் 13 பேர் இன்று காலை பங்களாதேஷ் படையினரின் முற்றுகையின் மூலம் மீட்கப்பட்டனர்.

எனினும் மேலும் 20 பணயக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பங்களாதேஷ இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளதாக இராணுவ அதிகாரிகள்; தெரிவித்தனர். எனினும் இது தொடர்பான மேலதிக விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

மீட்கப்பட்டவர்களில் இரு இலங்கையர்களும் அடங்குவதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இலங்கையர்கள் காயமடையவில்லை எனவும் அதிர்சியின் காரணமாக இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டாக்காவில் ராஜதந்திரிகள் வலயமொன்றிலுள்ள உணவு விடுதிக்குள் புகுந்த ஐ.எஸ், 8-9 ஆயுதபாணிகள் வாடிக்கையாளர்கள், உணவு விடுதி ஊழியர்கள் உட்பட பலரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்தனர்.

இப்பணயக்கைதிகளில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களும் அடங்கியிருந்தனர்

ஐ.எஸ். அமைப்பு இந்நடவடிக்கைக்கு உரிமை கோரியது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு ஆயுதபாணிகள் இணங்காத நிலையில் பங்களாதேஷ் படையினரும் பொலிஸாரும் இன்று காலை 8 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இதில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பயணயக் கைதிகள், 6 தீவிரவாதிகள் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

#MetroNews

17731dhaka-2 17731dhaka3

LEAVE A REPLY