தேமலைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

0
3001

tTWB5zat800x480_IMAGE55042176வெப்பமண்டல பகுதிகளில் வசிப்போருக்கு தோல் நோய்கள் அதிகம் ஏற்படும். அப்படி ஏற்படும் தோல் நோய்களில் ஒன்று தான் வெள்ளைத் திட்டுக்கள் அல்லது தேமல். இது பெரியவர் முதல் சிறியவர் வரை யாரையும் தாக்கலாம். இருப்பினும் இளம்பருவத்தினருக்கே தேமல் அதிகம் வருகிறது.

இந்த தேமல் மார்பு, முதுகு, கழுத்து, கை, கால், முகம் போன்ற இடங்களில் வெள்ளை நிற வட்ட திட்டுக்கள் போன்று காணப்படும். இந்த பிரச்சனை அதிகமாக வியர்பவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும்.

இந்த தேமல் பிரச்சனைக்கு என்ன தான் கடைகளில் மருந்துகள் விற்கப்பட்டாலும், சில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. இப்போது இந்த தேமல் பிரச்சனைக்கான சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.

துளசி இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம் அந்த வெள்ளைத் திட்டுக்கள் மறையும்.

ஒரு கப் நீரில் வேப்பிலைகளை சிறிது போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும். மேலும் வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், வெள்ளை திட்டுக்கள் நீங்கும்.

தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பி12 கிடைக்கும். இல்லாவிட்டால் ஆப்பிள் தோலை பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், வெள்ளை திட்டுக்கள் குணமாக்கப்படும்.

தயிரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த நீரால் கழுவ வேண்டும். இதன் மூலம் வெள்ளை திட்டுக்களைப் போக்கலாம்.

புளி கொட்டையை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 2-3 மணிநேரம் ஊற வைத்து, சாதாரண நீரில் அல்லது வேப்பிலை நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.

1 டீஸ்பூன் இஞ்சி சாற்றியில் 5-6 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, வெள்ளை திட்டுக்கள் வேகமாக மறையும்.

ஊதா நிற முட்டைக்கோஸை சிறிது அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வந்தால், சீக்கிரம் வெள்ளைத் திட்டுக்களை மறைவதைக் காணலாம்.

LEAVE A REPLY