வாக்கெடுப்பு முடிவின் எதிரொலி: உபரி வரவு செலவுத் திட்டத்தை கைவிட்ட பிரிட்டிஷ் அரசு

0
89

160313123252_georg_2916571gதசாப்தத்தின் இறுதியில் உபரி வரவு செலவுத் திட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த பிரிட்டிஷ் அரசு அதனை கைவிட்டுள்ளது.

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவை தொடர்ந்து பொருளாதாரம் குறித்து ஏற்பட்டுள்ள அச்சங்கள் காரணமாக இது கைவிடப்பட்டதாக நிதி அமைச்சர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் கூறியுள்ளார்.

இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்.

2020ம் ஆண்டு வாக்கில் அரசு செலவினங்களைக் காட்டிலும் வரி வருவாயை அதிகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது ஐக்கிய ராஜ்ஜிய அரசானது, வரி உயர்வுக்கான தேவையை குறைக்க அதிக பணத்தை கடன் வாங்கவும், வரி வருவாய் குறைந்தால் செலவினங்களை குறைக்கவும் தயாராகி வருகிறது.

வரி வருவாய் குறையும் என்றே பல நிபுணர்களும் கணித்திருக்கிறார்கள்.

-BBC-

LEAVE A REPLY