ஐரோப்பிய கால்பந்து: முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது வேல்ஸ் அணி

0
151

201607021047367111_EURO-2016-wale-historic-quarter-final-win_SECVPF15-வது ஐரோப்பிய கோப்பை (யூரோ) கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.

இதன் கால்இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் கால்இறுதியில் போர்ச்சுக்கல் அணி 5-3 என்ற கணக்கில் (பெனால்டி ஷுட் அவுட்) போலந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

2-வது கால்இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்தது. இதில் வேல்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் முதல் கோலை அடித்தது. நய்கோலன் இந்த கோலை அடித்தார். 31-வது நிமிடத்தில் வேல்ஸ் அணி ஆஸ்லே வில்லியம்ஸ் பதில் கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவியது.

2–வது பகுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணி மேலும் 2 கோலை அடித்தது. ராப்சன் 55–வது நிமிடத்திலும், சாம்வோக்ஸ் 86–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெல்ஜியம் அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது பரிதாபமே. முடிவில் வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

வேல்ஸ் அணி அரை இறுதியில் போர்ச்சுக்கல்லை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

பெல்ஜியம் அணி உலக தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணிக்கு இந்த தோல்வி மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாகும்.

வேல்ஸ் அணி தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கிறது. அதிர்ச்சிகரமான இந்த தோல்வியால் பெல்ஜியம் அணி வெளியேற்றப்பட்டது.

LEAVE A REPLY