சீனா நெடுஞ்சாலையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலி

0
93

201607021023096877_26-killed-in-bus-crash-in-China_SECVPFசீனாவில் நெடுஞ்சாலை வழியாக சென்ற பஸ்சின் டயர் பஞ்சராகி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள க்சிங்டாய் நகரில் இருந்து லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் நகரை நோக்கி நேற்று 30 பயணிகளுடன் ஒரு பஸ் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. டியான்ஜிங் மற்றும் சிசியான் நகரங்களுக்கு இடையில் வரும் வழியில் வேகமாக வந்த அந்த பஸ்சின் டயர் திடீரென்று பஞ்சர் ஆனது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய பஸ், படோய் என்ற இடத்தின் அருகே சாலையோர தடுப்பின்மீது மோதி உடைத்துக் கொண்டு ஓரமாக தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து, உருண்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 26 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

LEAVE A REPLY