சுவாதி கொலைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டது எப்படி? கொலைக்கான காரணம் வெளியானது

0
69

1902606281Indiaஇந்தியா-நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகநபரான செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை.

அவன் தப்பிச்செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து பொலிஸார் தேடி வந்தனர். ஆனால் அதில் முகம் தெளிவாக இல்லாததால் கொலையாளி யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் தடுமாறி வந்த நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொறியல் பட்டதாரியான ராம்குமார் செங்கொட்டையை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று மாதங்களாக சூளைமேட்டில் வசித்துவந்துள்ளார். சுவாதி கொலை செய்த்தை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர் சுவாதியை ஒரு தலையாக காதலித்து உள்ளார். இதற்கு சுவாதி சம்மதிக்காததால் சுவாதியை அவர் வெட்டிக்கொலை செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ராம்குமாரை போலீசார் எப்படி சுற்றிவளைத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

சுவாதியை கொலை செய்துவிட்டு, அவரது தொலைபேசியை எடுத்துச்சென்ற குற்றவாளி போனை 10 நிமிடங்கள் மட்டும் ஆன் செய்துள்ளான். ஆன் செய்யப்பட்ட போது தொலைபேசி இருந்த இடத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஒரு தனிப்படை பொலிசார் கணினி மூலம் வரையப்பட்ட கொலையாளியின் புகைப்படத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.

இதில் சுவாதியின் வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் வாட்ச்மேனிடம் பொலிசார் நேற்று விசாரித்ததில், மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்து.

இதனை அடுத்து அவரது அறையின் பூட்டை உடைத்து பொலிசார் சோதனை நடத்தினார்கள். அறையில் அவரது வீட்டு முகவரி உட்பட இளைஞரை பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை அடுத்து நேற்று இரவு 12 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ராம்குமாரை அவரது வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்தனர். பொலிசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தெரிந்ததும் ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக அவரை மீனாட்சிபுரம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ராம்குமாருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY