இழுபரி நிலை முடிவுக்கு வந்தது; இலங்கை மத்திய வங்கிக்கு ஆளுநர் நியமிக்கப்பட்டார்

0
193

coomaraswamy-2இலங்கை மத்திய வங்கியின் 14 ஆவது ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையின் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராவார் என்பதோடு, பொதுநலவாய செயலகத்தின் முன்னாள் பொருளாதார விவகார பணிப்பாளராக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து தரப்பினரினதும் இணக்கத்தின் அடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்திருந்தார்.

அதன் மூலம் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வந்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பேராசிரியல் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை (04) பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவமாமி, மத்தியவங்கியின் ஆளுநராக உத்தியோகபூர்வமாக கடமையாற்றுவார் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள்

01) Mr. John Exter ( 1950 to 1953 )
02) Mr. N.U. Jayawardena ( 1953 to 1954 )
03) Mr. A.G. Ranasinha ( 1954 to 1959 )
04) Mr. D.W. Rajapatirana ( 1959 to 1967 )
05) Mr. W. Tennekoon ( 1967 to 1971 )
06) Mr. H.E. Tennekoon ( 1971 to 1979 )
07) Dr. W. Rasaputram ( 1979 to 1988 )
08) Dr. H.N.S. Karunatilake ( 1988 to 1992 )
09) Mr. H.B. Disanayaka ( 1992 to 1995 )
10) Deshamanya A.S. Jayawardena ( 1995 to 2004 )
11) Deshamanya Sunil Mendis ( 2004 to 2006 )
12) Mr. Ajith Nivard Cabraal ( 2006 to 2015 )
13) Mr. Arjuna Mahendran 26 January 2015 – 30 June 2016

#Thinakaran

LEAVE A REPLY