மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­க­ளின் பாது­காப்பை உடன் பலப்­ப­டுத்­துக: அமை­ச்­சர் சாக­ல­விடம் ஹலீம் கோரிக்­கை

0
168

01072016vidi031கடந்த 21ஆம் திகதி மஹி­யங்­கனை நகரில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்ட பேர­ணி­யொன்றில் ஞான­சா­ர­ தேரர் ஆற்­றிய உரை­யை­ய­டுத்து அப்­ப­குதி முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளதால் அங்­குள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் உரிய பாது­காப்­பினை வழங்­கு­மாறு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­விடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அமைச்சர் ஹலீம் தான் நேரில் அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவைச் சந்­தித்து இந்த வேண்­டு­கோளை விடுத்­துள்­ள­தா­கவும் மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கும் சக­வாழ்­வுக்கும் அரசு உறுதி வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

மஹி­யங்­கனைப் பகுதி முஸ்­லிம்கள் எவ்­வித அச்­சமும் கொள்ளத் தேவை­யில்­லை­யெ­னவும் கூறினார்.

முஸ்லிம் சம­ய­வி­வ­கார அமைச்சர் என்ற வகையில் முஸ்­லிம்­க­ளுக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பாது­காப்பை உறு­தி­செய்­வது தனது கடமை என்றும் அரசு இதற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ளும் எனவும் தெரி­வித்தார்.

மஹி­யங்­க­னையில் முஸ்லிம் இளை­ஞர்கள் கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று பௌத்­த­கொ­டி­யினை எரித்த சம்­ப­வத்தை அடுத்து அப்­ப­கு­தியில் உ ருவா­கி­யுள்ள அச்­ச­நிலை தொடர்பில் வின­விய போதே அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இத்­த­க­வலை வெளி­யிட்டார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்­பாக கருத்து வெளி­யி­டு­கையில் மஹி­யங்­கனை பகு­தி­யி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்­க­ளான பங்­க­ர­கம்­மன, ரோஹன மற்றும் தம்­ப­கொல்ல பகு­தி­க­ளி­லுள்ள பள்ளி வாசல்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ் பாது­காப்­பினை அதி­க­ரிப்­ப­தற்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க உடன்­பட்­டுள்ளார்.

முஸ்லிம் இளை­ஞர்கள் இன நல்­லு­றவைப் பேணு­வதில் மிகவும் உறு­தி­யாக இருக்க வேண்டும். தாம் செய்யும் தவ­று­களால் பாரிய விளை­வுகள் உரு­வாக வாய்ப்பு ஏற்­படும் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது என்றார்.

கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று மஹி­யங்­கனை பன்­ச­லையில் பௌத்த குரு ஒருவர் ஆற்­றிய மார்க்க பிர­சங்­கத்தின் போது முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான கருத்­து­வெ­ளி­யிட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த கொடி­யினை எரித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பங்­க­ர­கம்­ம­னையைச் சேர்ந்த 8 முஸ்லிம் இளை­ஞர்கள் பதுளை நீதவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டின் கீழ் இரு பெரும்பான்மை இனத்தவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

#Vidivelli

LEAVE A REPLY