(Video) இயற்கையின் அழகிற்கு மத்தியில் கிழக்கு முதலமைச்சரின் ஏறாவூர் இஃப்தார் நிகழ்வு

0
230

(அஹமட் இர்ஷாட்)

____ ______கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் ஏற்பாட்டில் ஏறாவூர் வாவிக்கரை சிறுவர் பூங்காவில் வித்தியாசமான முறையில் இயற்கையின் அழகிற்கு மத்தியில் நேற்று (01) வெள்ளிக்கிழ்மை இஃப்தார் நிகழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் றிஸ்வியின் மார்க்க சொற்பொழிவுடன் ஆரம்பமான குறித்த இஃப்தார் நிகழ்வில் முக்கிய விடயமாக பூங்காவிற்கான விளையாட்டு இயந்திரம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனேகமான மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும்.

அத்தோடு கல்குடா பிரதேசத்திலிருந்து அதிகளவான நோன்பாளிகளும் கலந்து கொண்டதோடு, உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த இஃப்தார் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகாண சபை உறுப்பினர் கலையரசன் உரையாற்றுகையில்,

“இஸ்லாமிய மதத்தின் முக்கியமாக கருத்தப்படும் அல்குர்ஆனை மணனம் செய்து ஹாபிஸ் எனும் சிறப்பு பட்டத்தினை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தன்னுடன் வைத்திருப்பதானது சகல மக்களுக்கும் பெருமை சேர்க்கின்ற விடயமாகும்.

அத்தோடு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுறை கூறியதை போன்று முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகமும் பிட்டும் தேங்காய் பூவும் போன்று வாழ வேண்டும் என்றால் ஈரானில் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய எழுச்சியை போன்று அரசியல் ரீதியாக போராட வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எமக்குள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வுகள் நீக்கப்பட வேண்டும் என்றால் அரசியல் தலைவர்கள் கட்டாயம் கைகோர்க்க வேண்டும்.

அரசியல் ரீதியாக மக்ககளை நல்வழிப்படுத்தி, விழிர்புணர்ச்சி ஊட்டி எமது பிரதேசத்தினை ஒற்றுமையுடன் கட்டிகாக்க முற்பட்ட வேண்டும். இதை ஏன் இங்கு முக்கியமாக கூறுகின்றேன் என்றால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எமது முதமைச்சருக்கு கடற்படை அதிகாரிக்கும் உரசல் ஏற்பட்ட பொழுது இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகளும், பொதுபலசேன போன்ற அமைப்புக்களும் பெரிதாக தூக்கி பிடித்தார்கள்.

எமது முதலமைச்சர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகவே அவ்வாறு பெரும் பான்மை சமூகத்தில் உள்ள பேரினவாதிகள் முதலமைச்சருக்கு எதிராக இனதுவேச முறையிலான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள்.

ஆகவே எமது பிரதேசத்தினை எதிர்காலத்தில் நாங்கள் எங்களது ஆளுமைக்குள்ளும், சுயயாட்சிகுள்ளும் வைத்திருக்க வேண்டுமானால் இரண்டு சமூகமும் ஒற்றுமையுடன் மக்களை விழிப்படைய செய்ய வேண்டிய விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதனோடு சேர்த்து இன, மத, மொழி, வேற்பாட்டிற்கு அப்பால் நின்று செயற்பட்டு வரும் எமது முதலமைச்சரினுடைய அபிவிருத்து முன்னெடுப்புக்களுக்கும் ஏனைய திட்டங்களும் ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

இஃப்தார் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,

Hafiz Naseer 1“இன்றைய கால கட்டத்தில் அரசியல் தலைமைகள் அனைத்தும் இணைந்து செயலாற்றி வருகின்ற நிலையில் அதனை எவரும் கொச்சைப்படுத்தவோ, கேள்விக்குட்படுத்தவோ அல்லது அதனை இலகுவான விடயம் என எடை போட்டுவிடவும் முடியாது.

பாரிய கேள்விகள் எங்களுடைய உள்ளங்களில் இருக்கின்றது என்பதனை உணர்ந்து கொண்டு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த கிழக்கு மாகாண சபையினை எற்படுத்தியுள்ளோம்.

மாகாணத்திலே இப்பொழுது இருக்கின்ற ஆட்சியானது தெளிவானதொரு நல்லாட்சியாக இருக்கின்ற அதே நேரத்தில், மாகாணத்திலே இருக்கின்ற ஒவ்வொருவரும் சகோதரர்களைப் போன்று நினைத்து செயல்படுகின்றவர்களாக இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கினை உருவாக்கி வருகின்றோம் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்” என தெரிவித்தார் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.

01 10 9 8 7

LEAVE A REPLY