கதிர்காமம் பாத யாத்திரிகர்கள் மீது காட்டுயானைகள் தாக்குதல்

0
618

Elephant Attckகதிர்காமம் பாத யாத்திரிகர்கள் மீது குமண காட்டுப்பகுதியில் யானை தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்திற்கு பாத யாத்திரையாக சென்ற குழுவினர் மீது நேற்று (01) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்டு யானைகள் தாக்கியுள்ளதுடன் ஐவர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குமண ஊடாக கதிர்காமம் செல்லும் வழியில் கிணற்றடி எனும் இடத்தில் நள்ளிரவு பக்தர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை திடீரென வந்த காட்டு யானைகள் அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளன.

இதன்போது அவகள் கூச்சலிட அங்கு வந்த இராணுவத்தினர் யானைகளை விரட்டி யாத்திரிகர்களை காப்பாற்றியுள்ளனர்.

இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் பாதிக்கப்பட்டதுடன் உடனடியாக இராணுவத்தினரின் உதவியுடன் உகந்தை குமண எனும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.

இவ்வாறு காயமடைந்த பெண் எஸ். ராஜினி (28)பாணம ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொத்துவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் சற்று ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக அக்கரைப்பற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த ஆண் எஸ். சந்திரசேகரன் (58) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பழுகாமம் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

#Thinakaran

LEAVE A REPLY