சீனாவில் திடீர் மண் சரிவு: 10 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு

0
83

201607011803034095_Mudslide-kills-10-people-in-China_SECVPFசீனாவின் தெற்குமேற்குப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மலைப்பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் மலைப்பகுதியான கிஜோவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் உயிருடன் புதைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில், 7 பேரை உயிருடன் மீட்ட மீட்புக்குழுவினர், மற்றவர்களை தேடியபோது 10 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடிவருவதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு சீனாவின் பிற பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழைக்கு பலியான மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி யாங்செங் நகரில் வீசிய கடும் சூறாவளிக்கு 98 பேர் பலியாகினர்.

LEAVE A REPLY