இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் அதிகரிக்கும் வன்முறை

0
161

israel_clashஇஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையில், வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரயேலிய ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, பெண்ணொருவர் கடும் காயமடைந்துள்ளார்.

அந்த துப்பாக்கிதாரியை இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகிறது.

israel_gazaஅமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுக் குடியுரிமையைப் பெற்றிருந்த 13 வயதான சிறுமியின் யூதக் குடியிருப்பை உடைத்து நுழைந்த பாலஸ்தீனர் ஒருவர், அவரை கத்தியால் குத்திக் கொன்ற ஒரு நாளைக்கு பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதற்கு பிறகு, கத்தி வைத்திருந்த பாலஸ்தீனப் பெண்ணொருவரை இஸ்ரேல் காவல் துறையினர் இன்று காலை சுட்டு கொன்றதோடு சேர்த்து, இரண்டு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வியாழக்கிழமை மாலை, இஸ்ரயேலியர் இருவரை கத்தியால் குத்தி காயமடைய செய்த பாலஸ்தீனர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

#BBC

LEAVE A REPLY