உலமா சபை ஜனா­தி­­ப­திக்கு அவ­சர கடி­தம்

0
211

01072016vidi011‘முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாகக் கருதும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முஹம்­மது நபி­யையும் ஞான­சார தேரர் அவ­ம­தித்துப் பேசி­யுள்­ள­மையை முஸ்­லிம்­களால் சகித்­துக்­கொள்ள முடி­யாது.எந்­த­வொரு முஸ்­லிமாலும் இதனை அனு­ம­திக்க முடி­யாது. நீதியின் முன் அனை­வரும் சமம் என்ற அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் இவ்­வி­ட­யத்தில் நியா­ய­மான தீர்­வொன்­றினை எதிர்­பார்க்­கி­றார்கள்’ என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் ­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலேயே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் ஆற்­றிய பகி­ரங்க உரையை அனை­வரும் அறி­வார்கள்.

அந்த உரை முஸ்­லிம்­களை மிகவும் புண்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தச் சம்­பவம் முஸ்லிம் அமைப்­பு­க­ளினால் பொலிஸ்மா அதி­ப­ருக்கு முறை­யி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்தே தேரர் முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாகக் கருதும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முகம்­மது நபி­யையும் அவ­ம­தித்துப் பேசி­யுள்ளார். கருத்து வெளி­யிட்­டுள்ளார். இதனை எந்­த­வொரு முஸ்­லிமும் சகிக்­க­மாட்டார். ஞான­சார தேரர் பேசி­யுள்­ளதை எந்­த­வொரு சமய நம்­பிக்­கை­யுள்­ள­வரும் அனு­ம­திக்­க­மாட்­டார்கள்.

ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் ஆற்­றிய உரையில் மீண்டும் அளுத்­க­மை போன்­றதோர் சம்­பவம் தேவையா என்று கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். இதுவும் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யுள்­ளது.

அவர் முஸ்­லிம்­க­ளையும் பொலி­ஸா­ரையும் எச்­ச­ரிக்கும் பாணியில் பேசி­யுள்ளார். இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் பற்றி வெறுப்­பு­ணர்வு ஏற்­படும் வகை­யி­லான அவ­ரது உரையை நாம் கண்­டிக்­கிறோம்.

அளுத்­கம சம்­ப­வத்­துக்கு யார் பொறுப்­பு­தாரி என்­பது கடந்த காலங்­களில் அறிய முடி­யா­தி­ருந்­தது. தற்­போது ஞான­சார தேரர்தான் அளுத்­கம சம்­ப­வத்­துக்கு முழு­மை­யான பொறுப்­பு­தாரி என நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

‘போய் அல்­லாஹ்­விடம் முறை­யி­டுங்கள்’ என்று கூறு­வ­தற்கு அவ­ருக்கு எந்த உரி­மையும் இல்லை என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­வீர்கள் என்று நம்­பு­கிறோம்.

அளுத்­கம சம்­ப­வத்­துக்கு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மையே அவரை இவ்­வா­றான பேச்­சுக்கு உற்­சாக மூட்­டி­யுள்­ளது என நாம் நினைக்­கிறோம். அதனால் சட்­டத்தின் முன் அனை­வரும் சமம் என்ற வகையில் முஸ்­லிம்கள் இவ்­வி­வ­கா­ரத்­துக்கு நியா­ய­மான தீர்­வினை எதிர்­பார்­க்கி­றார்கள்.

அர­சாங்கம் எவ­ருக்கும் தேவை­யற்ற ஆபத்­தான நிலை­மை­களை உரு­வாக்க இட­ம­ளிக்க வேண்­டா­மென வேண்டிக் கொள்­கிறோம்.
சாந்­தியும் சமா­தா­னமும் மிக்க நாட்­டுக்­காக அல்­லாஹ்வைப் பிரார்த்­திக்­கிறோம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஞான­சார தேரரின் உரை தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்­துள்­ளது.

ஞானசார தேரரின் உரையையடுத்து முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படாது இருக்கும் படியும் இனவாதிகளின் சதிவலையில் வீழ்ந்துவிடாது இருக்கும்படி முஸ்லிம்களை வேண்டிக்கொள்ளும்படியும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஜும் ஆ பிரசங்கங்களில் இதுபற்றி மக்களைத் தெளிவுபடுத்தும் படியும் அதில் வேண்டியுள்ளது.

-Vidivelli-

LEAVE A REPLY