உதய கம்மன்பில பிணையில் விடுதலை

0
126

Udaya-Gammanpila-newsfirstபிவித்துரு ஹெல உருமயவின் தலைவரான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

25 ,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 500,000 ரூபா வீதமான மூன்று சரீரப் பிணைகளிலும் உதயகம்மன்பில பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர் ஒருவருக்கு சொந்தமான 41 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை போலி அட்டோர்னி பத்திரம் மூலம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

-NF-

LEAVE A REPLY