(Poem) என்ன மன்னிச்சிடுங்க கோப்பால்

0
54

(Mohamed Nizous)

ரேடியோ விளம்பரத்தை நம்பி உடுப்பு வாங்கப் போய் நான் ஏமாந்திட்டன் கோப்பால். ஏமாந்திட்டன்.

கழிவு விலை என்று சொல்லி பழைய டிசைன் அபாயாவ தந்திட்டாங்க கோப்பால்

லேட்டஸ்ட் என்று சொல்லி பிஞ்ச டெனிம் ஒண்ட பிள்ளைக்கு கொடுத்தாங்க கோப்பால்

உங்களுக்கு சேர்ட் சைஸ் இல்லாததால பெரிய சைஸ் உடுக்கிறதுதான் பெஷன் என்று சொல்லி இவ்வளவு பெரிய சேர்ட்ட பெக்கிங் உடைக்காம கொடுத்திட்டாங்க கோப்பால்

Gift தருவோம் என்று சொன்னாங்க கோப்பால். அப்புறமா ஆறு மாசம் முடிஞ்ச கலண்டரத் தந்து ஏமாத்திட்டாங்க கோப்பால் ஏமாத்திட்டாங்க.

ஒருஜினல் கிப்ஸ் எண்டு சொல்லி லேபல மாத்தி லோக்கல தந்திருக்காங்க கோப்பால்.

என்ன மன்னிச்சிடுங்க கோப்பால். மெடம் மெடம் என்று சொல்லி என்ன உசக்க ஏத்தி ஒருத்தருக்கும் உடுக்க ஏலா ஒயில் புடவை ஒண்டையும் எனக்கு வித்திட்டாங்க கோப்பால்.

எல்லாத்துக்கும் மேல உங்க கிரடிட் கார்ட்டுக்கு உங்களுக்குத் தெரியாம நான் சைன் பண்ணி வாங்கினதுக்கு என்ன மன்னிச்சிடுங்க கோப்பால். மன்னிச்சிடுங்க.

LEAVE A REPLY