மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை ஆரம்பப் பிரிவுக்கு புதிய கட்டிடத் தொகுதி

0
790

-ஏ.எச்.ஏ. ஹு ஸைன்-

62680931மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை ஆரம்பப் பிரிவுக்கான புதிய கட்டிடத் தொகுதியை நிருமாணிக்கும் பணிகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதா கிருஸ்ணனால் சனிக்கிழமை (ஜுலை 01, 2016) அன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பாடசாலை நிருவாகம் அறிவித்துள்ளது.

பாடசாலை அதிபர் இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உப தவிசாளர் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY