வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக தடை சட்டம்: முஜிபுர் ரஹ்மான்

0
38

60f53f9b-00ff-4cf0-8420-a8df8812b2d3இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் பேச்­சுக்­க­ளுக்கு எதி­ரான தடைச்­சட்­டமொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டிய அவ­சியம் குறித்து பலரும் வலி­யு­றுத்தி வரு­கின்றனர்.

இந்­நி­லையில் விரைவில் இது குறித்த தனி நபர் பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தான் நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­வ­தாக கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்திக் குழுத் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அத்­துடன் கடந்த வாரம் மஹி­யங்­க­னையில் பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தத்தை தூண்டும் விதத்­தி­லான வெறுப்புக் கருத்­துக்­களை வெளியிட்­டி­ருக்­கிறார். இது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

ஏற்­க­னவே இவர் அளுத்­கம பகு­தியில் இன­வாத பேச்சு பேசி­யதன் விளைவை நாடு கண்­டு­கொண்­டது. தற்­போது அவ்­வா­றா­ன­தொரு சூழலை ஏற்­ப­டுத்தும் விதத்தில் அவர் மீண்டும் வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வரு­கின்றார்.

இது பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். எனவே தாம­திக்­காது வெறுப்புப்­பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்தும் சட்­ட­மொன்றை இயற்றும் அவ­சரத் தேவை எழுந்­துள்­ள­து என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில்,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் இன­வா­தி­க­ளுக்கு கள­ம­மைத்­துக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் நாட்டில் இனக்­கு­ரோதம் வளர்க்­கப்­பட்டு அதன் எதி­ரொ­லி­யாக நாட்டில் பாரிய விப­ரீ­தங்கள் ஏற்­பட்­டன.

2015 ஜன­வ­ரியில் நாட்டு பற்­றுள்ள மக்கள் இன­வா­தத்தை தோற்­க­டித்­தனர். அத்­துடன் இன­வா­தி­களின் கொட்டம் அடங்­கி­விடும் என மக்கள் எதிர்ப்­பார்த்­தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் இன­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

இருந்­த­போ­திலும் முன்னர் இருந்­தது போன்று பொது­பல சேனா­விற்கு அரசின் ஆசீர்­வாதம் இல்லை. அவர்­களால் தற்­போது எத­னையும் செய்­து­விட முடி­யாது. இப்­போது அவர்­க­ளது கூட்­டங்­களை மக்கள் புறக்­க­ணித்து வரு­கின்­றனர். அவர்­களால் மீண்­டெழ முடி­யாது.

இருப்­பினும் அவர் ஏனைய மதங்­களை குறி­வைத்து இன­வாத கருத்துக்கள் மூலம் வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து வரு­கின்றார். இதனால் முஸ்­லிம்­களும் ஏனைய சிறு­பான்­மை­யி­னரும் அச்­ச­ம­டை­கின்­றனர்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போதும் இன­வாத பேச்­சுக்­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் தடுப்­ப­தற்கு சட்டம் கொண்டு வருவோம் என நாம் வாக்­கு­று­தி­ய­ளித்தோம். அதனை நிறைவேற்றவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்­நி­லையில் தொடர்ந்தும் தாம­திக்­காது நாம் இவ்­வ­றா­ன­தொரு சட்­டத்தை கொண்­டு­வர வேண்டும்.

விரைவில் இன­வாத பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்தும் சட்டம் தொடர்­பி­லான தனி­நபர் பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நான் மேற்­கொண்டு வரு­கிறேன்.

அத்­துடன், அடுத்­த­வாரம் பாரா­ளு­மன்ற கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஞானசார தேரரின் உரை மற்றும் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளேன்.

இதேவேளை, ஏற்கனவே அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக்குழு கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு அழுத்தமாக கூறியிருக்கிறேன் என்றார்.

LEAVE A REPLY