மாணவர்கள் மத்தியில் போதை கலந்த மாத்திரைகள் அறிமுகமாகி வருகின்றது: கவனமாய் இருக்குமாறு வேண்டுகோள்

0
122

(விசேட நிருபர்)

a6c518b6-7970-4699-944c-7ebf07fc9412மாணவர்கள் மத்தியில் இன்று போதை கலந்த மாத்திரைகள் அறிமுகமாகி வருகின்றது .இதில் பெற்றார்களும் ஆசிரியர்களும், சிறுவர் அபிவிருத்திக்காக வேலை செய்யும் உத்தியோகத்தர்களும் கவனமாக இருக்க வேண்டும் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

இன்று (30.6.2016) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பகுதி நாள் கூட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்று பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் ஒருவகையான போதை கலந்த மாத்திரைகள் அறிமுகமாகி வருவதாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் பெற்றார்களும் ஆசிரியர்களும், சிறுவர் அபிவிருத்திக்காக வேலை செய்யும் உத்தியோகத்தர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெற்றார்கள் தமது பிள்ளைகளின் பாடசாலை பைகளை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும்.

இதில் சிறுவர்களுக்காக வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன் இந்த போதை மாத்திரைகள் விற்பணை செய்யப்படும் இடங்கள் குறித்து தகவல்களை பெற்று சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த வேண்டும். இவைகள் சிறுவர்களை அழிக்கும் செயல்களாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவைகள் இடம் பெறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அதே போன்று அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத பிரத்தியேக கல்வி நிலையங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; நாம் வசிக்கும் வீட்டை கட்டு வதற்கு எவ்வளவு தூரம் அக்கறை காட்டுகின்றோம் ஆனால் பிரத்தியேக கல்வி நிலையங்களை அடிப்படை வசதிகள் இல்லாமல் வைத்திருக்கின்றனர். இவைகள் தொடர்பில் அதிகாரிகள் கவனமெடுத்து அவைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சில பிரத்தியேக கல்வி நிலையங்களில் காலை ஆறுமணிக்கே வகுப்புக்களை ஆரம்பிக்கின்றனர். இதற்காக காலை ஐந்து மணிக்கு மாணவர்கள் செல்கின்றனர். இது ஒரு பிழையான நடைமுறையாகும்.

மாணவர்கள் காலை ஐந்த மணிக்கு அல்லது ஆறுமணிக்கு தனியாக பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கு செல்லும் போது காணாமல்; போவதற்கும் சமூகச் சீரழிவுகள் இடம் பெறுவதற்கும் சிறுவர் வன்முறைகள் இடம் பெறுவதற்கும் காரணமாக அமைகின்றது.

அதனால் காலை 7மணிக்குப்பின்பே பிரத்தியேக கல்வி நிலையங்களில் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும்.

அதே போன்று மாலை வேளையில் ஐந்து மணிக்கு முன்னர் வகுப்புக்களை நிறைவு செய்ய வேண்டும். மாலை ஆறு மணிக்குப் பின்னர் வகுப்புக்கள் நிறைவு செய்யப்படும் போது மாணவர்கள் வீதிகளினால் செல்லும் போது விபத்துக்கள் இடம் பெற வாய்ப்புண்டு இவைகள் தொடர்பில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாள் எம்.சிவராசா, காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பொறுப்பதிகாரி எம்.செல்வராசா, காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் மற்றும் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.பதுர்தீன் மற்றும் இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் அத்தியட்சகர் எம்.ளெபள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY