கித்துள் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் உழவு இயந்திரங்களுடன் கைது

0
128

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கித்துள் ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவர் உழவு இயந்திர இழுவைப் பெட்டிகளுடன் இன்று (30) வியாழக்கிழமை பகல் கைது செய்யப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கித்துள் பகுதியில் போதைப் பொருள் உட்பட பல சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து தமக்குத் தகவல் கிடைத்ததன் பேரில் கித்துள் ஆற்றுப் பகுதியில் மறைந்திருந்தபோது சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ. வஹாப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட உழவு இயந்திர சாரதிகள் இருவரும் முறையே 23 மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் மரப்பாலம் மற்றும் கிண்ணையடிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY