அரசவடிசாராயத்தை அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்த குடும்பப் பெண் கைது

0
119

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestசட்டவிரோதமான முறையில் அரச வடிசாராயத்தை அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் வைத்து விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குடும்பப் பெண்ணொருவரை (வயது 38) தாம் கைது செய்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட போதை வஸ்து ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ. வஹாப் தெரிவித்தார்.

750 மில்லி லீற்றர் கொண்ட 5 போத்தல்கள் அரச வடிசாராயத்தைச் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்படி பெண் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மைலம்பாவெளி முருகன் கோயில் வீதியில் அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை பகல் (ஜுன் 29, 2016) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இப்பெண் இத்தகைய சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புலானாய்வு செய்த மட்டக்களப்பு மாவட்ட போதை வஸ்து ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ. வஹாப் தலைமையிலான குழுவினர் இப்பெண்ணைக் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY