(Update) ஜெயந்தியாயவில் கோர விபத்து; வபாத்தானோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு

0
44

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

inna_lillahi_wa_inna_ilaihi_rajioonஅந்திக் கருக்கல் வேளையில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் மாணவர்கள் இருவர் உட்படமூவர் மரணித்துள்ளனர். மற்றொரு குடும்பஸ்தர் படுகாயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாய, மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் இன்று (29) புதன்கிழமை மாலை 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஜெயந்தியாய கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கரீம் ஹஸ்மிர் (வயது 16) மற்றும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த நிஸ்தார் மிஸ்பாக் (வயது 20) சனூஸ் இம்தாத் (வயது 16) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாகும்.

மரணமான இருவரின் ஜனாஸாக்களும் வெலிக்கந்தை வைத்தியசாலையிலும் மற்றொருவரின் ஜனாஸா பொலொன்னறுவை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மோட்டார் சைக்கிள்களின் பின்னால் அமர்ந்து சென்ற முஹம்மத் ஷியாம் (வயது 30) என்பவர் படுகாயங்களக்குள்ளான நிலையில் பொலொன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY