புதிய முறைப்படி இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்கலாம்

0
280

290620160111111ஹஜ் குழு இவ்­வ­ருடம் ஹஜ் கோட்­டாவை கையாண்ட புதிய முறை­யின்­படி ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு உயர் நீதி­மன்றம் நேற்று உத்­த­ரவு வழங்­கி­ய­துடன் ஹஜ் குழு­விற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கின் விசா­ர­ணையை அடுத்­த­வ­ருடம் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது.

மனு­தா­ரர்­களால் புதிய முறைக்கு தடை­யுத்­த­ரவு கோரப்­பட்டும் அதனை நீதி­மன்றம் நிரா­க­ரித்­தது.

மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளான கரீம் லங்கா டிரவல்ஸ், அம்ஜா டிரவல்ஸ், இக்ராஃ டிரவல்ஸ் ஆகி­யன இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக இவ்­வ­ழக்­கினை தாக்கல் செய்­தி­ருந்­தன. பிர­தி­வா­தி­க­ளாக ஹஜ் குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர், முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் என்போர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த வழக்­கிற்கு இடை­யீட்டு மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. 10 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் இடை­யீட்டு மனுவை தாக்கல் செய்­தி­ருந்­தனர். மனுவில் இவ்­வ­ரு­டத்­துக்­கான கோட்டா கையா­ளப்­பட்ட முறை­மை­யினால் ஹஜ் யத்­தி­ரி­கர்கள் நலன் பேணப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் கட்­ட­ணங்­களில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு குறைந்த கட்­ட­ணத்தில் முக­வர்­களைத் தெரிவு செய்ய முடி­யு­மா­ன­தாக இந்த புதிய முறை அமைந்­துள்­ளதால் புதிய முறையை அமுல்­ப­டுத்த உத்­த­ரவு வழங்­கும்­ப­டியும் நீதி­மன்­றினைக் கேட்­டி­ருந்­தனர்.

இடை­யீட்டு மனுவின் விசா­ர­ணை­யின்­போது ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி புதிய முறையே சிறந்­தது என வாதிட்டார்.

ஹஜ் கமிட்டி உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள வழி­மு­றை­களை (Guide Lines) பின்­பற்­றி­யுள்­ள­தாகக் கூறினார். யாத்­தி­ரி­கர்கள் எந்த முகவர் மூலம் பய­ணிக்க வேண்டும் என ஹஜ் கமிட்டி தீர்­மா­னிக்­காது யாத்­தி­ரி­கர்­களே தமது முக­வர்­களைத் தீர்­மா­னிக்கும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முக­வர்­களின் தனி உரிமை இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ள­தெ­னவும் ஹஜ் கட்­ட­ணங்கள் புதிய முறையின் கீழ் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் வாதிட்டார்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் விப­ரங்கள் அடங்­கிய தர­வுகள் சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு அனுப்பி வைக்க வேண்­டிய இறுதித் தினம் ஜூலை மாதம் 7 ஆம் திக­தி­யாகும் என்றும் சட்­டத்­த­ரணி தனது வாதத்தை முன்­வைத்தார்.

இத­னை­ய­டுத்து உயர்­நீ­தி­மன்றம் மார்க்கக் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டக்­கூ­டாது என்றும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­க­ரு­தியும் புதிய முறையில் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு ஹஜ் குழு­வுக்கு அனு­மதி வழங்­கி­யது.

பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பணிப்­பாளர் எம்.எம்.எம்.ஸமீல் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுரேன் ஞானராஜ் மற்றும் ஹஜ் கமிட்­டியின் சார்பில் சட்­டத்­த­ரணி பர­த­லிங்கம் உட்­பட 9 சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

வாதி­க­ளான மூன்று ஹஜ் முக­வர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மனோர டி சில்வா, ருஷ்தி ஹபீப், இரேசா காளி­ய­தாச ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

உயர் நீதி­மன்றம் வழங்­கிய உத்­த­ரவு தொடர்பில் ஹஜ் குழு உறுப்­பினர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் கருத்து தெரி­விக்­கையில்;
இது ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் ஹஜ் குழு­வுக்கும் கிடைத்த வெற்­றி­யாகும். புதிய ஹஜ் வழி­மு­றைக்கு உயர்­நீ­தி­மன்றம் தடை விதிக்க வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும் என்றார்.

வழக்­கினைத் தாக்கல் செய்­தி­ருந்த மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­களில் ஒரு முகவர் நிலையமான கரீம் லங்கா நிறுவனத்தின் உரிமையாளர் கரீம் ஹாஜியார் கருத்து தெரிவிக்கையில்;

‘வழக்கு இன்னும் முடியவில்லை. அது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஓர் இடையீட்டு மனுவினைத் தாக்கல் செய்து வழக்கினை தொடர்வதற்கு எம்மால் முடியும்.

அப்படிச் செய்தால் ஹாஜிமாரே பாதிக்கப்படுவார்கள். அதனால் ஹாஜிமாரின் நலன்கருதி நாம் மௌனமாக இருக்கிறோம்’ என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY