வாட்ஸ் அப் சேவைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

0
127

WhatsApp-Messengerஇந்தியாவில் வாட்ஸ் அப்புக்கு முற்றிலுமாக தடை விதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

வாட்ஸ்அப்பை தடைசெய்யக் கோரி குர்காவோனைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் செயற்பாட்டாளர் சுதிர் யாதவ் என்பவர் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதி வாட்ஸ்அப் செயலி END TO END ENCRYPTION எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பகிரப்படும் செய்தி முன்பு இருந்ததை விட மிகவும் பாதுகாப்பு மிக்கவையாக இருக்கின்றன. இந்த வசதி மூலம் பகிரப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் பெறப்படும் நபரை தவிர வேறு யாராலும் அறிய முடியாது.

மற்றவர்களுக்கு அர்த்தம் குறிப்பிட முடியாத குறியீடுகளாகவே தெரியும். எனவே தேசிய நலன் கருதி வாட்ஸ்அப் தகவல்களை Decryption செய்யலாம் என்றால் கூட வாட்ஸ்அப் சேவையில் Decryption Code வசதியும் இல்லை.

இந்நிலையில் இந்த புதிய 256 BIT ENCRYPTION எனப்படும் வசதியினால் அனுப்பிய செய்திகளையோ, படங்களையோ இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.

இத்தகைய வசதி தீவிரவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் அமைந்து பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே வாட்ஸ்அப் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று சுதிர் யாதவ் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் முன்னிலையில் அமர்வுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று விசாரணைக்கு வந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் தொலைத்தொடர்பு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகுமாறு மனுதாரரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

LEAVE A REPLY