யூரோ கால்பந்து: சர்வதேச போட்டிகளில் இருந்து ஆஸ்திரியா அணி கேப்டன் பியுச் ஓய்வு

0
20

201606291650521095_Euro-2016-Austrian-captain-Fuchs-retires-from-international_SECVPF15-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் குரூப்-எப் பிரிவில், ஆஸ்திரியா அணி விளையாடியது. லீக் சுற்றில் ஹங்கேரி மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வி அடைந்தது. போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், ஆஸ்திரியா அணியின் கேப்டனும், லீசெஸ்டர் நகர தடுப்பாட்டக்காரருமான பியுச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 30.

ஓய்வு தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:-

ஐஸ்லாந்து அணிக்கு எதிரான போட்டி தான் என்னுடைய கடைசி போட்டியாகும். தேசிய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடியது பெருமையாக உள்ளது. எல்லாவற்றையும் நாட்டுப் பற்றுடன் செய்தேன்.

ஆஸ்திரியா அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற கோபா கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

LEAVE A REPLY