இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதலில் பலி 41 ஆக உயர்வு: 239 பேர் காயம்

0
93

201606291743238717_41-dead-239-wounded-in-Istanbul-attack-governor_SECVPFதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்றிரவு சுமார் 10 மணியளவில் பயணிகள் வருகை பகுதி கூடத்துக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவன், இயந்திர துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான்.

இதனால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்று நுழைவு வாயிலை நோக்கி, தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது அவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். தப்பி ஓடியவர்கள் பலர் நுழைவு வாயில் கதவை நோக்கி ஓடியபோது, அங்கு நின்றிருந்த மற்றொரு தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதேபோல், வாகனங்கள் நிறுத்தும் பகுதியிலும் இன்னொரு மனித குண்டு தாக்குதல் நடத்தினான்.

உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 36 பேர் பலியானதாகவும், 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 239 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், இவர்களில் 109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாவும் நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்கள். சவூதி அரேபியாவைச் சேர்ந்த 5 பேரும், ஈராக்கைச்சேர்ந்த 2 பேரும், துனிசியா, உஸ்பெகிஸ்தான், சீனா, ஈரான், உக்ரைன் மற்றும் ஜோர்டானைச் சேர்ந்த தலா ஒருவரும் பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY