மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்கள் சிலர் தமது இடமாற்றத்தினை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

0
290

(விசேட நிருபர்)

efe4a56c-1e09-4de0-899c-bb03155c8f44மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்கள் சிலர் தமது இடமாற்றத்தினை ரத்துச் செய்யுமாறு கோரி இன்று (29.6.2016) புதன்கிழமை மட்டக்களப்பு வலயக் கல்வியலுவலகத்திற்கு முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாசடாலைகளில் பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி விட்டு மீண்டும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாசடாலைகளுக்கு தாம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த இடமாற்றத்தினை ரத்துச் செய்யக் கோரியும் இந்த ஆரிசிரியர்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய இவ்வாசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் சுலோகங்களை தாங்கி இந்த கவன ஈர்ப்ப ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் தாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை உள்ளிட்ட கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாக கடமையாற்றினோம். பல வருடங்கள் இவ்வாறு கஷ்டப்பிரதேசங்களில் ஆசிரியர்களாக கடமையாற்றிய நாங்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டு தற்போது இந்த வலயத்திலுள்ள பாசடாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றோம்.

15வருடம் வேறு வலயத்தில் ஆசியர்களாக கடமையாற்றிய பின்பு மீண்டும் ஒரு புதிய வலயமா எனக் கேட்க விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கேள்வியெழுப்பினர்

மீண்டும் கஷ்டப்பிரதேசத்திற்கு இடமாற்றப்படடிருப்பது எமக்கு கவலையளிக்கின்றது. அதே நேரம் கஷ்டப்பிரதேசங்களில் கடமையாற்றாத இந்த வலயத்திலுள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து இந்த வலயத்திற்குள்ளே கடமையாற்றுகின்றனர். இவ்வாறிருக்க தக்கதாக நாங்கள் கஷ்டப்பிரதேசங்களில் கடமையாற்றிய எங்களுக்கு மீண்டும் கண்டப்பிரதேசங்களுக்கு இடமாற்றப்படுவது என்ன நியாயம் எனக் கேட்கின்றோம் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு வலய கல்வித்திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு எமது இடமாற்றத்தினை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரினை மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர்; உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

0cb724cb-a964-493d-b1ba-9d33120857af

2e2f5170-651b-46ef-9ace-d67e423b8b08

79b9aebb-c67c-432f-a46c-7503a57d975f

af729bb8-00ea-43e7-8150-4c2957b082d1

c800239a-e46d-4ea7-a3f8-1a59df316b2f

e3273ff8-50e5-4a2d-9d88-4270f051d05b

ee3228bc-c56e-4a4d-8205-72a9820949f0

LEAVE A REPLY