ஷேறா (SEARAA) அமைப்பு அங்குராப்பணம் செய்யும் நிகழ்வும் இப்தார் நிகழ்வு

0
235

(கரீம் யஹ்யா கான்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில், சவூதி அரேபியாவுக்கான பணியாளர்களை அனுப்பும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஷேறா (SEARAA) எனும் பெயரில் அமைப்பு ஒன்றை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும், 2016-06-28 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்லி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துக்கொறல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அமைச்சின் தொழில்பணிப்பாளர், பொதுமுகாமையாளர் ஆகியோரும் ஜித்தாவில் இருக்கும் இலங்கைக்கான கௌன்சுலர் ஜெனரல் பைசர் மக்கீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமைப்பின் தலைவர் எம்.எஸ்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயலாளர் பாத்திமா சிபா,பொருளாளர் லக்மானி குணசேகர லலாணி, பிரதிப் பொருளாளர் ஏ.சீ.யஹ்யா கான், உதவிச் செயலாளர் எம்.எம்.எஸ்.சிஹாம் மௌலானா ஆகியோரும் ஏனைய நிருவாக உறுப்பினர்கள் உட்பட 110 வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்து கொண்டனர்.

436cfa03-e864-4c63-a1b6-0e9735d99ce5

37911c82-181d-4dc5-8cbc-4c9205860409

66715985-5572-4b17-b220-6151fd957430

a1f3eac1-41f7-4e84-940f-8baf645c72c6

LEAVE A REPLY