ஏறாவூர் மீராகேணி மக்கள் எழுச்சிக் கிராமத்தில் 52 குடும்பங்களுக்கும் வீடமைத்துத் தருமாறு முதலமைச்சரிடம் வேண்டுகோள்

0
137

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

42a9a3ca-0a64-4acf-b371-4b077af8c97eஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாகத்தின் கீழ் வரும் மீராகேணி ஸம்ஸம் மக்கள் எழுச்சிக் கிராமத்தில் சுயமாக மீள் குடியமர்ந்துள்ள 52 குடும்பங்களுக்கும் வீடமைத்துத் தருமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது விடமான வேண்டுகோள் கடிதம் புதன்கிழமை (ஜுன் 29, 2016) முதலமைச்சரின் இணைப்பாளர் யூ.எல். முஹைதீன்பாவாவிடம் மீள் எழுச்சிக் கிராம ஸம்ஸம் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் கையளிக்கப்பட்டது.
அந்த வேண்டுகோள் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் பலதடவைகள் பாதிக்கப்பட்டு அகதிகளாகி சொந்த முயற்சியில் மீள் குடியமர்ந்திருக்கும் ஸம்ஸம் மீள் எழுச்சிக் கிராமத்தைச் சேர்ந்த 52 குடும்பங்களும் எந்த வித அடிப்படை வசதிகளுமில்லாது ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மழை காலங்களில் அவர்கள் வாழும் கொட்டில்கள் ஒழுகிக் கரைகின்றன. மலசல கூடங்களும் இல்லை. வீதிகள் கரடு முரடாகவும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகவும் மாறிவிடுகின்றன.

எனவே, பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்து மக்களின் துயர் துடைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

130bb64c-0c73-4ca6-aece-89095e21114b

LEAVE A REPLY