பெருநாளுக்கு அடுத்த தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்குக: எம்.எச்.ஏ. ஹலீம்

0
106

leave1அரசு, எதிர்­வரும் ஜூலை மாதம் 6 ஆம் திக­தியை நோன்புப் பெருநாள் விடு­முறை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளதால் முஸ்லிம் மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­களின் நலன்­க­ருதி பெருநாள் தினத்­தை­ய­டுத்த தினங்­க­ளான 7 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஆகிய இரு தினங்­க­ளையும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை தினங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­படி முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

கல்வி அமைச்­ச­ருக்கு இது தொடர்­பான கடி­த­மொன்­றினை அமைச்சர் ஹலீம் அனுப்பி வைத்­துள்ளார்.

வழங்­கப்­படும் இரண்டு விடு­முறை தினங்­க­ளுக்குப் பதி­லாக வேறு விடு­முறை தினங்­களில் பாட­சாலை நடத்­தப்­பட வேண்டும் என்ற நிபந்­த­னையின் கீழ் இந்த விடு­மு­றை­யினை வழங்­கும்­படி அமைச்சர் ஹலீம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

தற்­போது விடு­மு­றையின் கீழ் இருக்கும் முஸ்லிம் பாட­சா­லைகள் எதிர்­வரும் ஜூலை 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பிறை பார்க்­கப்­பட்டே பெருநாள் தினம் நிச்­ச­யிக்­கப்­ப­டு­வதால் பிறை தென்­ப­டாது விடின் ஜூலை 7 ஆம் திக­தியே நோன்புப் பெருநாள் கொண்­டா­டப்­படும்.

அவ்­வா­றாயின் முஸ்லிம் பாட­சா­லைகள் ஜூலை 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்திரமே பதில் பாடசாலை நடத்தும் நிபந்தனையின் கீழ் விடுமுறை பெற்றுக்கொள்ள வேண்டியேற்படும்.

-Vidivelli-

LEAVE A REPLY